அரசியல்

முன்னாள் பிரதமர் உட்பட ஐவர் கட்சியில் இருந்து நீக்கம்

28/05/2020 08:47 PM

கோலாலம்பூர், 28 மே (பெர்னாமா) -- கடந்த 18-ஆம் தேதி நடைபெற்ற மக்களவைக் கூட்டத்தில் எதிர்கட்சி அணியில் அமர்ந்ததைத் தொடர்ந்து,  முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமது, டத்தோ ஶ்ரீ முக்ரீஸ் மகாதீர் ஆகியோர், பெர்சத்து  கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

அவ்விருவருடன், குபாங் பாசு நாடாளுமன்ற உறுப்பினர், டத்தோ அமிருடின் ஹம்சா, சிம்பாங் ரெங்காம் நாடாளுமன்ற உறுப்பினர், மஸ்லி மாலிக் மற்றும் பெர்சத்து கட்சியின் இளைஞர் பிரிவுத் தலைவர், சையிட் சாடிக் சையிட் அப்துல் ரஹ்மான், ஆகியோரும் கட்சியில் இருந்து நீக்கப்பட்டிருக்கின்றனர்.

பெர்சத்து கட்சியின் செயலாளர் இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் அந்நீக்கம் குறித்து அறிவித்திருக்கிறார்.

-- பெர்னாமா