உலகம்

பெரும்பாலான நாடுகளில் பொது முடக்கங்களுக்கு தளர்வுகள்

23/05/2020 05:33 PM

மிச்சிகன், 23 மே (பெர்னாமா) -- கொவிட்-19 நோய் தாக்கத்தினால் ஏற்பட்டிருக்கும் பொருளாதார சரிவைச் சமாளிக்க, அமெரிக்கா உட்பட பெரும்பாலான நாடுகளில் அமல்படுத்தப்பட்டு வந்த பொது முடக்கங்களுக்கு தளர்வுகள் வழங்கப்பட்டிருக்கின்றன. 

இந்நிலையில், அமெரிக்காவிலும் தளர்வுகள் வழங்கப்பட்டிருக்கும் வேளையில், இந்நோயின் இரண்டாவது அலை ஏற்பட்டால், அந்நாட்டில் பொது முடக்கம் மீண்டும் அமல்படுத்தப்படாது என்று அதன் அதிபர் டொனல்ட் டிரம்ட் தெரிவித்திருக்கிறார். 

மக்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க நாட்டின் பொருளாதாரம் செழிப்பாக இருக்க வேண்டும் என்று அவர் கூறியிருக்கிறார். 

கொவிட்-19 நோய்ப் பரவலைத் தடுக்க, அமெரிக்காவில் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் தொழில், வர்த்தகம் முடங்கியதால், பொருளாதாரம் வீழ்ச்சியடைந்தது. 

இதன் காரணமாக அங்குள்ள 50 மாகாணங்களும் கட்டுப்பாடுகளைத் தளர்த்தி பொருளாதார நடவடிக்கைகளை மீண்டும் தொடங்கியுள்ளன. 

தளர்வுகள் வழங்கப்பட்டாலும் முறையான கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளாவிட்டால், கொவிட்-19 நோயின் இரண்டாவது அலை ஏற்படக்கூடும் என்று உலக சுகாதார நிறுவனம் முன்னதாக எச்சரித்திருந்தது. 

-- பெர்னாமா