Wednesday, 27 May 2020
பொது
22/05/2020 07:34 PM

கோலாலம்பூர், 22 மே (பெர்னாமா) -- நாட்டில் உள்ள சில ஆலயங்கள் மீண்டும் செயல்படுவதற்கு அனுமதி வழங்கிய அரசாங்கத்தின் முடிவுக்கு நன்றி தெரிவித்து கொள்ளும் வேளையில், தற்போதையச் சூழலுக்கு இந்நடைமுறை ஏற்புடையது அல்ல என்று சில தரப்பினர் தங்களின் கருத்துகளைப் பெர்னாமா செய்திகளிடம் தெரிவித்திருக்கின்றனர்.
    
கொவிட்-19 நோய் பரவலை கட்டுப்படுத்த அரசாங்க பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் வேளையில், கடுமையான கட்டுப்பாடுகளுடன் மேற்கொள்ளப்படவிருக்கும் இந்நடைமுறை ஆலய நிர்வாகங்களுக்கு மட்டும் இல்லாமல் பொது மக்களுக்கும் சிரமத்தை ஏற்படுத்தும் என்று இந்து சமயம் சார்ந்த சங்கங்களின் பிரதிநிதிகள் தெரிவித்திருக்கின்றனர். 

இச்சூழலில் அதிகமான செயல்பாடுகளும், செலவுகளும் இருப்பதால், இவ்விவகாரம் குறித்து அரசாங்கம் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று அவர்கள் கேட்டு கொண்டனர். 

இருப்பினும், முறையான வழிக்காட்டுதல்களைப் பின்பற்றினால், இந்நடைமுறை சாத்தியப்படும் என்றும் சிலர் தெரிவித்திருக்கின்றனர். 

-- பெர்னாமா 

எங்களைப் பற்றி

Malaysia National News Agency
Wisma BERNAMA
No.28 Jalan BERNAMA
Off Jalan Tun Razak
50400 Kuala Lumpur
Malaysia

Tel : +603-2693 9933 (General Line)
Email : helpdesk@bernama.com, tamil@bernama.com

மற்றவை

Corporate Site
தொடர்பு கொள்க

எங்களை தொடர்க