BREAKING NEWS   Former inspector general of police (IGP) Tun Mohammed Hanif Omar died at 2.15 am today - Son | Bekas Ketua Polis Negara (KPN) Tun Mohammed Hanif Omar meninggal dunia pada 2.15 pagi tadi - Anak | 
பொது

ரோன் 97 மற்றும் ரோன் 95 ரகப் பெட்ரோல் லிட்டருக்கு 7 சென் ஏற்றம்

22/05/2020 07:22 PM

கோலாலம்பூர், 22 மே (பெர்னாமா) -- நாளை சனிக்கிழமை, மே 23-ஆம் தேதி தொடங்கி, மே 29-ஆம் தேதி வரையில், ரோன் 97 மற்றும் ரோன் 95 ரகப் பெட்ரோல், லிட்டருக்கு, 7 சென் ஏற்றம் கண்டிருக்கின்றன. 

இதன்வழி, ரோன் 97 ரகப் பெட்ரோல் ஒரு லிட்டர் ஒரு ரிங்கிட் 68 சென்னுக்கு விற்கப்படும். 

RON 95 ரக பெட்ரோல், ஒரு லிட்டர், ஒரு ரிங்கிட் 38 சென்னுக்கு விற்கப்படும். 

டீசல், லிட்டருக்கு, 6 சென் ஏற்றம் கண்டு, லிட்டருக்கு ஒரு ரிங்கிட், 51 சென்னுக்கு விற்கப்படும். 

-- பெர்னாமா