BREAKING NEWS   Former inspector general of police (IGP) Tun Mohammed Hanif Omar died at 2.15 am today - Son | Bekas Ketua Polis Negara (KPN) Tun Mohammed Hanif Omar meninggal dunia pada 2.15 pagi tadi - Anak | 
பொது

மாமன்னர் பிறந்த நாளை முன்னிட்டு அனைத்து நிகழ்ச்சிகளும் ஒத்தி வைப்பது

22/05/2020 07:21 PM

கோலாலம்பூர் , 22 மே (பெர்னாமா) -- மாட்சிமைத் தங்கிய மாமன்னர் அல்-சுல்தான் அப்துல்லா ரியாயாதுடின் அல்-முஸ்தாபா பில்லா ஷா -வின் அதிகாரப்பூர்வ பிறந்த நாளை முன்னிட்டு, ஜூன் மாதத்தில் நடைபெறவிருந்த அனைத்து நிகழ்ச்சிகளும் ஒத்தி வைக்கப்பட்டிருக்கிறது. 

கொவிட் 19 நோயைக் கட்டுப்படுத்த ஜூன் ஒன்பதாம் தேதி வரை அமல்படுத்தப்படவிருக்கும் நிபந்தனைக்குட்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவைத் தொடர்ந்து, இந்நிகழ்ச்சிகளை ஒத்தி வைக்குமாறு மாமன்னர் தெரிவித்ததாக இஸ்தானா நெகாரா மேலாளர் டத்தோ அமாட் ஃபடில் சம்சுடின், இன்று வெள்ளிக்கிழமை, ஓர் அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறார். 

நாடு இன்னும் கொவிட் 19 நோய்த் தாக்கத்தை எதிர்நோக்கி வருவதால், ஜூன் மூன்றாம் தேதி தொடங்கி 11 ஆம் தேதி வரை நடைபெறத் திட்டமிடப்பட்டிருந்த அனைத்து நிகழ்ச்சிகளும், பாதுகாப்பு மற்றும் சுகாதார நலன் கருதி, பின்னர் அறிவிக்கப்படும் மற்றொரு தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டிருப்பதாக அமாட் ஃபடில் தெரிவித்தார். 

தேசிய தலைமைச் செயலாளர் டத்தோ ஶ்ரீ  சுக்கி அலி கடந்த மார்ச் நான்காம் தேதி, அறிவித்ததுபோல், வரும் ஜூன் 8 ஆம் தேதி மாமன்னரின் அதிகாரப்பூர்வ பிறந்தநாள் கொண்டாடப்படவிருப்பதோடு, அத்தினம் பொது விடுமுறையாகவும் அறிவிக்கப்பட்டிருப்பதாக அமாட் ஃபடில் குறிப்பிட்டார்.

-- பெர்னாமா