விளையாட்டு

ஜெர்மனி பண்டேஸ்லீகா: பாயேன் லெவகுசேன் 4-1 என்ற கோல்களில் வெற்றி..!

19/05/2020 05:45 PM

ப்ரெமன், 19 மே (பெர்னாமா) --ஜெர்மனி பண்டேஸ்லீகா கிண்ண காற்பந்து போட்டியில், பாயேன் லெவகுசேன்  4-1 என்ற கோல்களில், வெடர் பிரேமனை வீழ்த்தி இருக்கிறது. 

கொவிட்19 தாக்கத்தினால், கடந்த சில மாதங்களுக்குப் பிறகு, மீண்டும் காற்பந்து விளையாட்டு களத்தில் குதித்திருக்கும் கிளப்புகளின் ஆட்டங்கள் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ள போதிலும், அதன் காற்பந்து அரங்கங்கள் ரசிர்களின்றி காலியாக இருப்பதையும் காண முடிகிறது. 

பண்டேஸ்லீகா கிண்ண புள்ளிப் பட்டியலில், ஐந்தாவது இடத்தில் இருக்கும் பாயேன் லெவகுசேன்  இந்த ஆட்டத்தை வெற்றிக்கொண்டதன் மூலம், மொத்தமாக 50 புள்ளிகளைப் பெற்றிருக்கிறது. 

தொடர் சரிவுகளை எதிர்கொண்டு வரும் வெடர் பிரேமன் 18 புள்ளிகளுடன் 17-வது இடத்தில் இருக்கிறது. 

முதல் பாதி ஆட்டத்தின், 28-வது நிமிடத்தில் முதல் கோலை அடைத்த கய் ஹவெர்ட்ஸ் 33-வது நிமிடத்தில், அக்கிளப்புக்கு இரண்டாவது கோலையும் பெற்றுத் தந்தார். 

வெடர் பிரேமன் தங்கள் இலக்கில் ஒரே கோலை மட்டுமே அடித்த வேளையில், பாயேன் லெவகுசேன்  மேலும் இரண்டு கோல்களைப் போட்டு, வெற்றியை அதன் பக்கம் சாதகமாக்கிக் கொண்டது.  

-- பெர்னாமா