Wednesday, 27 May 2020
விளையாட்டு
15/05/2020 04:56 PM

ஜப்பான், 15 மே (பெர்னாமா) -- கொவிட்-19 நோய் எதிரொலியால், ஒத்தி வைக்கப்பட்டிருக்கும் 2020-ஆம் ஆண்டு தோக்கியோ ஒலிம்பிக் போட்டியின் செலவுகள் உட்பட இப்போட்டியை ஒத்திவைத்ததால் ஏற்பட்டிருக்கும்  தாக்கத்தை ஜப்பானும் அனைத்துலக ஒலிம்பிக் செயற்குழுவும் கூட்டாக மதிப்பீடு செய்யவிருக்கின்றன.

இப்போட்டி தள்ளிவைக்கப்பட்டிருப்பதால் ஏற்படும் செலவுகள் மற்றும் கடன்களுக்கு மட்டுமே 80 கோடி டாலர் ஒதுக்கப்பட்டிருப்பதாக அனைத்துலக ஒலிம்பிக் செயற்குழு தெரிவித்திருக்கிறது.

இப்போட்டியை ஒரு வருடம் ஒத்திவைப்பதற்கான கூடுதல் செலவுகளை ஜப்பான் எதிர்கொண்டாலும், மொத்த இழப்பீட்டின் மதிப்பு அறியப்படாத நிலை ஏற்பட்டிருக்கிறது.
 
இருப்பினும், கொவிட்-19 தொற்று நோயால் ஏற்பட்டிருக்கும் இந்த கால தாமதத்தினால் 200 கோடி முதல் 600 கோடி டாலர் வரையிலான  கூடுதல் செலவுகளை ஜப்பான் சமாளிக்கவிருக்கிறது.

இதனிடையே, கொவிட்-19 கிருமிக்கு எதிரான தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்படாவிட்டால், அடுத்த ஆண்டு தோக்கியோ ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளை நடத்துவது சிரமம் என்று ஜப்பானிய மருத்துவக் குழு முன்னதாக அறிவித்திருந்தது.

-- பெர்னாமா 

எங்களைப் பற்றி

Malaysia National News Agency
Wisma BERNAMA
No.28 Jalan BERNAMA
Off Jalan Tun Razak
50400 Kuala Lumpur
Malaysia

Tel : +603-2693 9933 (General Line)
Email : helpdesk@bernama.com, tamil@bernama.com

மற்றவை

Corporate Site
தொடர்பு கொள்க

எங்களை தொடர்க