விளையாட்டு

2020 தோக்கியோ ஒலிம்பிக் போட்டி 2021-ஆம் ஆண்டு ஜூலை 23-ஆம் தேதி தொடங்கவிருக்கிறது 

31/03/2020 06:01 PM

தோக்கியோ, 31 மார்ச் [பெர்னாமா] -- கொவிட்-19 நோய் பரவல் காரணமாக ஒத்தி வைக்கப்பட்டிருக்கும் 2020 தோக்கியோ ஒலிம்பிக் போட்டி அடுத்த ஆண்டு ஜூலை 23-ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 8-ஆம் தேதி வரை நடைபெறவிருக்கிறது. 

பாராலிம்பிக் போட்டிகள் ஆகஸ்ட் 24-ஆம் தேதி முதல் செப்டம்பர் 5-ஆம் தேதி வரை நடைபெறும் என்று அனைத்துலக ஒலிம்பிக் செயற்குழு அறிவித்துள்ளது. 

உலகின் மிகப்பெரிய விளையாட்டு போட்டியாக கருதப்படும் இந்த ஒலிம்பிக் போட்டி ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும். 2016-ஆம் ஆண்டில் பிரேசில் ரியோ டி ஜெனிரோவில் நடைபெற்ற இப்போட்டி 2020-ஆம் ஆண்டில் ஜூலை 24-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 9-ஆம் தேதி வரை ஜப்பான் தோக்கியோவில் நடைபெறவிருந்தது. 

இருப்பினும், கொவிட்-19 நோயின் தாக்கம் அதிகரித்து வருவதால் ஒலிம்பிக் போட்டியை ஒத்திவைக்க வேண்டும் என்று விளையாட்டு வீரர்கள் உட்பட பல்வேறு தரப்பினர் வலியுறுத்தினர். ஏழு ஆண்டுகளாக போட்டிக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வந்த நிலையில், இப்போட்டி தள்ளிவைக்கப்பட்டிருப்பதால் பல கோடி செலவில் நிர்மாணிக்கப்பட்ட விளையாட்டு கிராமத்தை ஓராண்டுக்கு பராமரிக்க வேண்டியுள்ளது. 

-- பெர்னாமா