உலகம்

கொவிட்-19 நோயினால் நியூசிலாந்தில் முதல் மரணம்

29/03/2020 05:09 PM

வெலிங்ஸ்டன், 29 மார்ச் [பெர்னாமா] -- கொவிட்-19 நோயினால், நியூசிலாந்தில் முதல் மரணம் இன்று நிகழ்ந்திருக்கிறது.

இதுவரை அந்நாட்டில், 514 பேர் இந்நோயினால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். 

கொவிட்-19 நோய்ப் பரவலைக் கட்டுப்படுத்த, இந்தோனேசியாவில், பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மத்திய ஜாவா-வில் இருக்கும் முதன்மை சாலைகளில் கிருமிகளை அழித்துத் தொற்றுப் பரவுதலை தடுக்கும் நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்தோனேசியாவில், 1,155 பேர் அந்நோயினால் பாதிக்கப்பட்டிருப்பதுடன், 102 பேர் மரணமடைந்திருக்கின்றனர்.

இந்தியாவில் விதிக்கப்பட்டிருக்கும் ஊரடங்குச் சட்டத்தைப் பொதுமக்கள் முறையே பின்பற்றுவதை உறுதிச் செய்ய, போலீசாருடன் சேர்த்து ராணுவத்தினரும் பணியில் அமர்த்தப்பட்டிருக்கின்றனர்.

எனினும், 21 நாள் ஊடரங்கு சட்டம் அமலில் இருப்பதினால், குறைந்த வருமான பெறுபவர்கள், நிதிப் பற்றக்குறையை எதிர்நோக்க நேரிடும் என்று அந்நாட்டு பிரதமர் நரேந்திர மோடி வருத்தம் தெரிவித்திருந்தார்.

இதுவரை, அந்நாட்டில், கொவிட்-19 நோயினால் 987 பேர் பாதிக்கப்பட்டிருப்பதுடன், 25 மரணங்களும் நிகழ்ந்திருக்கின்றன.

சீனாவின், வுஹான் நகரத்தில் கொவிட்-19 நோய்க் காரணமாக, இரண்டு மாதங்களாக முடங்கி இருந்த சுரங்கப் பாதைகளும் நீண்ட தூர ரயில் சேவையும் மீண்டும் திறக்கப்பட்டிருக்கின்றன.

உலகையே பாதம் பார்த்துக் கொண்டிருக்கும் கொவிட்-19 நோய், முதன் முதலில்  ஒரு கோடியே 10 லட்சம் மக்கள் தொகையைக் கொண்ட வுஹான் நகரத்தில்தான் விஸ்வரூபம் எடுத்திருந்தது. 

தற்போது அந்நகரத்தில்  எந்தவொரு புதிய சம்பவமும் பதிவாகவில்லை என்றாலும், அங்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

-- பெர்னாமா