பொது

பெரும்பாலான பெட்ரோல் நிலையங்கள் மூடப்பட விருக்கின்றன.

26/03/2020 07:55 PM

கோலாலம்பூர், 26 மார்ச் [பெர்னாமா] -- நிதி நெருக்கடி காரணத்தினால், பெரும்பாலான பெட்ரோல் நிலையங்கள் மூடப்பட விருக்கின்றன.

அரசாங்கத்தின் நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவினால் வாகனங்களின் எண்ணிக்கைக் குறைந்திருப்பதும் எண்ணெய் விலை வீழ்ச்சியுற்றிருப்பதுமே இதற்குக் காரணம் என்று, மலேசிய பெட்ரோல் வர்த்தகர்கள் சங்கம் கூறுகிறது.

நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவுக்குப் பின்னர் எண்ணெய் விற்பனையில் 70 விழுக்காடு வீழ்ச்சியைப் பெட்ரோல் நிலையங்கள் பதிவு செய்திருப்பதாக, சங்கத் தலைவர் டத்தோ கைருல் அனுவார் அப்துல் அஜிஸ் இன்று வியாழக்கிழமைத் தெரிவித்தார்.

-- பெர்னாமா