Tuesday, 07 Apr 2020
பொது
26/03/2020 05:46 PM

பிறை, 26 மார்ச் [பெர்னாமா] --  பினாங்கில், நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவு அமலாக்கத் தரப்பினருக்கும் கொவிட்-19 நோய்ப் பரவலைக் கட்டுப்படுத்த போராடும் முன்னிலை பணியாளர்களுக்கும், அம்மாநிலத்தில் இருக்கும் தயாரிப்பு நிறுவனம் ஒன்று ஒரு லட்சம் முகக் கவசங்களை நன்கொடையாக வழங்கி இருக்கிறது.

மருத்துவமனை ஊழியர்கள், அரச மலேசிய போலீஸ் படை மற்றும் ஊராட்சித் துறையினர் ஆகியோர் இந்த முகக் கவசங்களைப் பெற்றனர்.

நிர்ணயிக்கப்பட்ட பாதுகாப்பு மற்றும் சுகாதார நடவடிக்கைகளைப் பின்பற்றி, குறைவான பிரதிநிதிகள், பினாங்கு, பிறையில் நடந்த இந்த முகக் கவசங்கள் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

பினாங்கு, புக்கிட் மெர்தாஜாம் மற்றும் கூலிம் மருத்துவமனைப் பிரதிநிதிகளும் அம்மாநிலத்தின் ஐந்து மாவட்டப் போலீஸ் தலைமையகப் பிரதிநிதிகளும் இந்த முகக் கவசங்களைப் பெற்றுக் கொள்ள வந்திருந்தனர்.

தவிர்த்து, பினாங்கு மற்றும் செபராங் பிறை நகராண்மைக் கழகம், குடிநுழைவுத் துறை, சுற்றுச் சூழல் துறை மற்றும் மாநில தகவல் சாதனங்களுக்கும் முகக் கவசங்கள் வழங்கப்பட்டன.

தமது வர்த்தக உறவை பயன்படுத்திப் பொருட்கள் பற்றாக்குறையை எதிர்நோக்கி இருக்கும் முன்னிலைப் பணியாளர்களுக்குப் பயன்படுத்த சீனாவிலிருந்து மூன்று லட்சம் முகக் கவசங்களைத் தாம் இறக்குமதி செய்ததாகச் செல்வகுமார் தெரிவித்தார்.

மேலும், இரண்டு லட்சம் முகக் கவசங்களும் 200 சுயப் பாதுகாப்பு உடைகளும் இன்னும் ஒரு வாரத்தில் கிடைக்கும்.

அவை சுகாதார ஊழியர்களுக்கு விநியோகிக்க மருத்துவமனைகளிடம் ஒப்படைக்கப்படும் என்றும் செல்வகுமார் குறிப்பிட்டார்.

-- பெர்னாமா

எங்களைப் பற்றி

Malaysia National News Agency
Wisma BERNAMA
No.28 Jalan BERNAMA
Off Jalan Tun Razak
50400 Kuala Lumpur
Malaysia

Tel : +603-2693 9933 (General Line)
Email : helpdesk@bernama.com, tamil@bernama.com

மற்றவை

Corporate Site
தொடர்பு கொள்க

எங்களை தொடர்க