Tuesday, 07 Apr 2020
பொது
26/03/2020 05:26 PM

புத்ராஜெயா, 26 மார்ச் [பெர்னாமா] -- நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவின் செயல்பாட்டு தர விதிமுறையான எஸ்ஓபி மேலும் கடுமையாக்கப்படும் என்று, தற்காப்பு அமைச்சர் டத்தோ ஶ்ரீ இஸ்மாயில் சப்ரி கோடிகாட்டி இருக்கின்றார்.

அன்றாடத் தேவைக்கான அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் உணவுகளை வாங்குவதற்காகப் பொதுமக்கள் வெளியே நடமாடுவதைக் கட்டுப்படுத்தும் வகையில் கூடுதலான கட்டுப்பாடுகளை விதிக்கும் சாத்தியம் இருப்பதாக அவர் குறிப்பிட்டிருக்கின்றார்.

தேசிய பாதுகாப்பு மன்றமான எம்கேஎன் தற்போது புதிய எஸ்ஓபி-யை உருவாக்கி வருவதாகவும் அது, நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவின் இரண்டாம் கட்டம் அமல்படுத்தப்படும்போது பயன்படுத்தப்படும் என்றும் இஸ்மாயில் சப்ரி தெரிவித்திருக்கின்றார்.

இதனிடையே, நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவை பின்பற்றுவோரின் விழுக்காடு தற்போது 95 விழுக்காடாக இருப்பதாகவும் இன்னும் அவ்வுத்தரவை மக்கள் பின்பற்றாமல் இருப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டிருக்கின்றார்.

மாநில பாதுகாப்பு மன்றத்தில், அமைச்சரவைச் சேர்ந்த அமைச்சர்கள், உறுப்பினராக இணைய வேண்டும் என்று அரசாங்கம் முடிவு செய்திருப்பதாக மூத்த அமைச்சருமான அவர் தெரிவித்திருக்கிறார்.

புத்ராஜெயாவில், இன்று வியாழக்கிழமை நடைபெற்ற நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவு தொடர்பான அமைச்சர்கள் சிறப்புச் செயற் குழுk கூட்டத்திற்குத் தலையேற்றப் பின்னர்ச் செய்தியாளர்களிடம் பேசிய, இஸ்மாயில் சப்ரி இவ்வாறு கூறினார்.

-- பெர்னாமா

எங்களைப் பற்றி

Malaysia National News Agency
Wisma BERNAMA
No.28 Jalan BERNAMA
Off Jalan Tun Razak
50400 Kuala Lumpur
Malaysia

Tel : +603-2693 9933 (General Line)
Email : helpdesk@bernama.com, tamil@bernama.com

மற்றவை

Corporate Site
தொடர்பு கொள்க

எங்களை தொடர்க