Tuesday, 07 Apr 2020
24/03/2020 08:49 PM

கோலாலம்பூர், 24 மார்ச் [பெர்னாமா] -- நாட்டில் தற்போது கொவிட்-19 நோயின் தாக்கம் அதிகரித்து வரும் சூழ்நிலையில் நாட்டு மக்கள் எதிர்நோக்கியுள்ள பொருளாதார நெருக்கடியை குறைக்க, நேற்று திங்கட்கிழமை, பிரதமர் டான் ஶ்ரீ முகிடின் யாசின் அறிவித்திருக்கும் உதவித் திட்டங்களை, மைக்கி எனப்படும் மலேசிய இந்திய தொழிலியல் சங்கங்களின் சம்மேளனம் வரவேற்கிறது.

இக்காலக்கட்டத்தில் இம்மாதிரியான உதவித் திட்டங்கள் குறைந்த வருமான பெறும் குறிப்பாக B40 குடும்பங்களை சேர்ந்தவர்களுக்கு உதவியாக இருக்கும் என்று மைக்கியின் தலைமைச் செயலாளர் டத்தோ டாக்டர் ஏ.டி. குமரராஜா தெரிவித்தார்.

55 வயதிற்கு கீழ்பட்ட அனைத்து ஊழியர் சேமநிதி வாரிய உறுப்பினர்களும், தங்களது இரண்டாவது கணக்கில் இருந்து மாதம் 500 ரிங்கிட்டை மீட்டுக் கொள்ளுவதற்கு அரசாங்கம் அறிவித்திருக்கும் சலுகை தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு பேருதவியாக இருக்கும் என்று அவர் தெரிவித்தார்.

ஒவ்வொரு வாரமும் பொருளாதார நடவடிக்கை மன்ற கூட்டத்திற்குப் பின்னர், முக்கிய அறிவிப்புகள் செய்யப்படும் என்று பிரதமர் அறிவித்திருந்தார்.

இதன் வழி மக்களுக்கு பயனளிக்கூடிய சிறப்பு திட்டங்கள் அறிவிக்கப்படும் என்றும் தாம் எதிர்பார்ப்பதாகவும் குமரராஜா கூறினார்.

கொவிட்-19 நோய் பரவலைக் கட்டுப்படுத்தும் முயற்சியாக, சுகாதார அமைச்சுக்கு 60 கோடி ரிங்கிட் வழங்கவும் மாநில அரசாங்கங்களுக்கு 13 கோடி ரிங்கிட் வழங்கவும் பி.டி.பி.டி.என். கடனை திரும்ப செலுத்தும் கால அவகாசத்தை மூன்று மாதத்திலிருந்து ஆறு மாதத்திற்கு ஒத்திவைப்பதாகவும் அரசாங்கம் நேற்று திங்கட்கிழமை அறிவித்திருந்தது. 

-- பெர்னாமா 

எங்களைப் பற்றி

Malaysia National News Agency
Wisma BERNAMA
No.28 Jalan BERNAMA
Off Jalan Tun Razak
50400 Kuala Lumpur
Malaysia

Tel : +603-2693 9933 (General Line)
Email : helpdesk@bernama.com, tamil@bernama.com

மற்றவை

Corporate Site
தொடர்பு கொள்க

எங்களை தொடர்க