BREAKING NEWS   Helicopter crash tragedy affects families of Malaysian Armed Forces, a big loss to the nation - PM Anwar | RMN helicopter crash: PM Anwar expresses condolences, prays the victims' families be given strength in time of tragedy | 

கொவிட்-19: விரைவு ரயில் இணைப்பு, ஈ.ஆர்.எல். சேவை, புதன்கிழமை தொடங்கி கட்டுப்படுத்தப்படும்

24/03/2020 08:40 PM

கோலாலம்பூர், 24 மார்ச் (பெர்னாமா) -- கொவிட்-19 நோயைக் கட்டுப்படுத்தும் முயற்சியாக அரசாங்கம் அறிவித்திருக்கும் நடவடிக்கைக் கட்டுப்பாட்டு உத்தரவைத் தொடர்ந்து, விரைவு ரயில் இணைப்பு, ஈ.ஆர்.எல். சேவை, நாளை, புதன்கிழமை முதல், பின்னர் அறிவிக்கப்படும் வரையில், தனது சேவையைக் கட்டுப்படுத்தி இருக்கிறது.

KLIA EKSPRES மற்றும் KLIA TRANSIT ஆகிய விரைவு ரயில்களின் சேவை இணைக்கப்பட்டு, தினமும் காலை 6 மணி முதல் 10 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 10 மணி  வரையிலும் செயல்படும் என்று ஈ.ஆர்.எல். ஓர் அறிக்கையின் வழி தெரிவித்திருக்கிறது.

கேஎல் சென்ட்ரல் மற்றும் கே.எல்.ஐ.ஏ.-விற்கான பயண நேரம் 35 நிமிடங்கள் ஆகும். KLIA EKSPRES மற்றும் KLIA TRANSIT ஆகிய ரயில் சேவையை ஈ.ஆர்.எல். நிர்வகிக்கிறது. இந்த ஈ.ஆர்.எல், கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையம், கே.எல்.ஐ.ஏ, கே.எல்.ஐ.ஏ 2 மற்றும் நகருக்கும் செல்லும் ரயில் சேவையை வழங்கி வருகிறது.

இதனிடையே, ரயில் சேவையைப் பயன்படுத்தும்போது சுகாதாரத்தையும், எப்போதும் ஒருவரிடமிருந்து குறைந்தது ஒரு மீட்டர் தூரத்திற்குத் தள்ளி இருப்பதையும் பின்பற்றுமாறு ஈ.ஆர்.எல் அறிவுறுத்தி இருக்கிறது. 

-- பெர்னாமா