Tuesday, 07 Apr 2020
விளையாட்டு
24/03/2020 07:42 PM

தோக்கியோ, 24 மார்ச் [பெர்னாமா] -- தோக்கியோ 2020 ஒலிம்பிக் போட்டியை ஒத்திவைக்க அதன் ஏற்பாட்டாளர்கள் திட்டமிட்டு வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

போட்டிகளை எப்படி மாற்றுவது, எந்த நேரத்தில் நடத்துவது போன்ற அம்சங்கள் பற்றி ஆராய்ந்து வருவதாக ஏற்பாட்டுக் குழுவில் இடம் பெற்றுள்ள ஒருவர் தெரிவித்ததாக ஜப்பானிய ஊடகங்கள் கூறுகின்றன.

உள்நாட்டில் மட்டுமே, முன்னூறு கோடி டாலர் மதிப்பிலான ஆதரவாளர் நிதியை ஜப்பான் பெற்றுள்ளது. ஒலிம்பிக் போட்டிகளுக்காக, இதுவரை 1200 கோடி டாலரையும் ஜப்பான் செலவுச் செய்துள்ளது.

கொவிட்-19 கிருமித்தொற்று காரணமாக உலகில் பல விளையாட்டுப் போட்டிகள் நிறுத்தப்பட்டுள்ளன. ஆனால் இந்த ஆண்டு இடம்பெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகளை எந்தத் தடையுமின்றி திட்டமிட்டபடி நடத்துவதில் ஜப்பானிய அரசாங்கம் தொடர்ந்து ஆர்வம் காட்டி வந்தது.

கிருமித்தொற்றால் உலகில் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை, தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருவதால் இந்த ஆண்டு ஒலிம்பிக் போட்டி திட்டமிட்டபடி நடக்குமா என்ற கேள்வி பலரிடையே எழுந்துள்ளது. இந்த நெருக்குதல்களை தொடர்ந்து, 2020 ஒலிம்பிக் போட்டி தள்ளி வைக்கப்படலாம் என்று ஜப்பானியப் பிரதமர் ஷின்சொ அபே கோடி காட்டியிருக்கிறார்.

-- பெர்னாமா

எங்களைப் பற்றி

Malaysia National News Agency
Wisma BERNAMA
No.28 Jalan BERNAMA
Off Jalan Tun Razak
50400 Kuala Lumpur
Malaysia

Tel : +603-2693 9933 (General Line)
Email : helpdesk@bernama.com, tamil@bernama.com

மற்றவை

Corporate Site
தொடர்பு கொள்க

எங்களை தொடர்க