COVID-19: மலேசியாவில் மேலும் நால்வர் பூரணக் குனம்

 
 
 

புத்ராஜெயா, 14 பிப்ரவரி [பெர்னாமா] -- மலேசியாவில், COVID-19 நோய்க் கிருமித் தொற்றியிருக்கும் 19 பேரில் நல்வர் பூரணமாகக் குணமடைந்து மருத்துவமனையிலிருந்து இன்று வியாழக்கிழமை வெளியேறியிருக்கின்றனர்.

இதனைத் தொடர்ந்து, நாட்டில் இந்நோயிலிருந்து பூரணமாகக் குனமடைந்திருப்போரின் எண்ணிக்கை ஏழாக உயர்ந்திருப்பதாகத் துணைப் பிரதமர் டத்தோ ஶ்ரீ டாக்டர் வான் அசிசா வான் இஸ்மாயில் அறிவித்திருக்கின்றார்.

இந்த ஏழு பேரும் சீனப் பிரஜைகள் என்றும் இரண்டு பெண்களும் அடங்கிய அவர்கள் 36 முதல் 66 வயதுக்குட்பட்டவர்கள் என்றும், புத்ராஜெயாவில் இன்று நடைபெற்ற COVID-19 மீதான தேசிய பேரிடர் நிர்வாகக் குழுவின் சிறப்புக் கூட்டத்திற்குத் தலைமைத் தாங்கிய பின்னர் டாக்டர் வான் அசிசா தெரிவித்தார்.

-- பெர்னாமா

 
 
 

       பொது

       அரசியல்

       சிறப்புச் செய்தி

       உலகம்