கொவிட்-19: முதல் ஜப்பானியர் பலி

 
 
 

தோக்கியோ, 14 பிப்ரவரி [பெர்னாமா] -- கொவிட்-19 நோய்க்கு முதல் ஜப்பானியர் பலியாகி இருப்பதை, அந்நாட்டு இன்று உறுதிப்படுத்தியது.

இன்று வெள்ளிக்கிழமைக் காலையில்தான் அந்த முதல் மரணம் நிகழ்ந்திருக்கிறது.

ஜப்பானில் கொவிட்-19 நோயினால் மரணமடைந்திருக்கும் 80 வயதுடைய இந்த மூதாட்டி, இம்மாதம் ஒன்றாம் தேதி முதல் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்திருக்கின்றார்.

அவருக்கு கொவிட்-19 கிருமித் தொற்றியிருப்பது அவரின் மரணத்திற்குப் பின்னர்தான் உறுதிப்படுத்தப்பட்டதாக ஜப்பானிய அதிகாரிகள் கூறினர்.

தோக்கியோவுக்கு அருகில் இருக்கும் ஓரிடத்தில் வசித்த அம்மூதாட்டி, கொவிட்-19 நோய்ப் பரவும் சீனாவின் வுஹான் நகருக்குச் சென்றிருக்கவில்லை.

அல்லது, வுஹான் நகரைச் சேர்ந்த சீன வருகையாளரிடமும் தொடர்புக் கொண்டிருக்கவில்லை.

ஆனால், அவருக்கு கொவிட்-19 கிருமி எவ்வாறு தொற்றியது என்பது குறித்து ஜப்பானியச் சுகாதார அதிகாரிகள் விசாரணைச் செய்து வருகின்றனர்.

இம்மூதாட்டி, இக்கிருமித் தொற்றியிருப்பது அண்மையில்தான் உறுதிப்படுத்தப்பட்ட ஒரு டாக்சி ஓட்டியின் மாமியார் என்று, ஜப்பானிய தகவல் சாதனங்கள் கூறுகின்றன.

-- பெர்னாமா

 
 
 

       பொது

       அரசியல்

       சிறப்புச் செய்தி

       உலகம்