வுஹான் நகருக்கு 1,400 இராணுவ மருத்துவ பணியாளர்கள் அனுப்பி வைக்கப் பட்டிருக்கின்றனர்

 
 
 

வுஹான், 13 பிப்ரவரி [பெர்னாமா] -- சீனா, வுஹான் நகரில், கொவிட்-19 நோயினால்  பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், அந்நகருக்கு 1,400 இராணுவ மருத்துவ பணியாளர்கள் அனுப்பி வைக்கப் பட்டிருக்கின்றனர். 

அந்நகரில் பணிபுரிந்து வரும் மருத்துவ பணியாளர்களுக்கு உதவ, இவர்கள்  களமிறக்கப்படுகின்றனர் என்று சீனா அறிவித்திருக்கிறது. 

Y-20 எனும் இராணுவ விமானங்கள் மூலம் இவர்கள் அனைவரும் வுஹான் வந்து சேர்ந்திருக்கின்றனர். 

மோசமடைந்து வரும் நிலமையை கட்டுப்படுத்த, மொத்தம் 2600 இராணுவ மருத்துவ பணியாளர்கள் வுஹானுக்கு அனுப்படவிருப்பதாக சீனா தெரிவித்திருக்கிறது. 

இதன் முதல் கட்டமாக, 1,400 இராணுவ மருத்துவ பணியாளர்கள் தற்போது வுஹானுக்கு வந்திருக்கின்றனர். 

ஏற்கனவே, 4, 000 இராணுவ மருத்துவ பணியாளர்கள் வுஹானில் பணியாற்றி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

-- பெர்னாமா   

 
 
 

       பொது

       அரசியல்

       சிறப்புச் செய்தி

       உலகம்